தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குருபூர்ணிமா

தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளியில் குருபூர்ணிமா

தூத்துக்குடி மூன்றாம் மைல் சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் குரு பூர்ணிமா நிகழ்ச்சி நடைப்பெற்றது.

சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர் ஜெயசண்முகம் தனது உரையில் குருபூர்ணிமா என்பது ஆடிமாத பௌர்ணமி நாளில் மகரிஷி வேத வியாசர் அவதரித்த நாள் என்றும், இவரே நான்கு வேதங்களையும் எழுதியவர் என்றும் கூறினார். தாய் தன் குழந்தையிடம் காட்டும் அன்பும், குரு தன் சிஷ்யனிடம் காட்டும் அக்கறையும் உலகில் மிகமிக உயர்வானது. எனவே மாணவ, மாணவியர்களாகிய நீங்கள் ஆசிரியர் கற்றுத்தரும் பாடங்களை கூர்மையாக கவனித்து, அதைப் பதிவாக்கினால் உயர்ந்த நிலையை அடையலாம்.

எனவே ஆசிரியைகளுக்கு மரியாதை கொடுத்து, அவர்களின் வழிகாட்டுதல்களோடு வாழ்க்கையில் நம் இலட்சியத்தை அடைய உறுதி கொள்வோம் என்று வாழ்த்திப் பேசினார்.

அதன்பின் மாணவ, மாணவியர்கள் பூக்களை சமர்ப்பித்து ஆசிரியைகளை வணங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியைகள் அனைவரும் பூத்தூவி மாணவ, மாணவிகளை வாழ்த்தினார்கள். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் செய்திருந்தனர்.