தகவல் தெரிவிக்காமல் விடுமுறை எடுக்கும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை புதிய கண்டிஷன்
36 நாட்கள் கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசு பள்ளியில் தகவல் தெரிவிக்காமல் விடுமுறை எடுக்கும் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகை தரும் போது தங்களது பெற்றோர்களை அழைத்து வர அறிவுறுத்த வேண்டும்.
அப்போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் விடுமுறை எடுத்ததற்கான காரணத்தை தெரிவித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.












