மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 25 ஆம் தேதி கடைசி நாள் :

மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ஜூன் 25 ஆம் தேதி கடைசி நாள் :

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நடைபெறுகிறது.

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 2025 – 2026 ம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மருத்துவ படிப்பில் சேர இதுவரையில் 60 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்திருப்பதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் வரும் மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்திருக்கிறது.

வருகின்ற 25ஆம் தேதி புதன்கிழமை விண்ணப்பத்திற்கான கடைசி நாளாகும், மேலும் அவகாசம் நீட்டிக்க வாய்ப்பு இருக்காது என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்வதற்கான அவகாசம் வழங்குவதற்கான வாய்ப்பும் இல்லை என சொல்லப்படுகிறது.

எனவே அவகாசம் வழங்குவதற்கான கோரிக்கையும் எழுந்துள்ளது.

துணை மருத்துவப் படிப்புகள்:

மருத்துவப் படிப்பு கலந்தாய்வு முடிந்த பிறகு, துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும், எனவே அந்த படிப்புகளுக்கும் தயாராக இருக்கவும்.