இந்தியா டுடே தரவரிசை:
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சிறப்பான இடம்
இந்தியா டுடே ஆண்டு தோறும் கல்லூரிகளுக்கான தர வரிசையை கல்லூரியின் தரம், கல்வி, ஆராய்ச்சி, வேலைவாய்ப்பு, கட்டணம் மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்து வெளியிடுகிறது..
அதுபோல் 2025 ம் ஆண்டிற்கான கல்லூரி தர வரிசையை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தனது 75 வது பவளவிழாவை கொண்டாடி வரும் தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி சிறப்பான இடங்களைப் பெற்று தூத்துக்குடிக்கு பெருமை சேர்த்துள்ளது.
இதில் 2 பாடப்பிரிவுதளில் 100 இடங்களுக்குள் பிடித்து கல்லூரி பவளவிழா ஆண்டில் கல்லூரிக்கு மகுடம் சூட்டியுள்ளது.
கலை (பி.ஏ) – 95வது இடம்
அறிவியல் (பி.எஸ்.சி) – 61வது இடம்
வாணிபம் (பி.காம்) – 128வது இடம்
தொழில் நிர்வாகம் (பி.பி.ஏ) – 117வது இடம்
கல்லூரி முதல்வர் முனைவர். வீரபாகு பெருமிதம் :
இந்த சாதனை, நிர்வாகத்தின் மற்றும் மாண்புமிகு செயலாளர் ஐயா ஏ. பி. சி. வீ. சொக்கலிங்கம் அவர்களின் வழிகாட்டலும் ஆதரவும்கூடியது,
பேராசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்களின் நெஞ்சார்ந்த அர்ப்பணிப்பும், கல்வித் துறையில் எங்களின் ஒட்டுமொத்த தாராள மனப்பான்மையும் ஊக்கமும் ஆகியவற்றின் வெளிப்பாடாகும்.
பாராட்டு :
இந்தியா டுடே தரவரிசை குழுவினரான பேராசிரியர் ஐயாதுரை, முனைவர் ஆவுடைச்செல்வி, முனைவர். செல்லபாண்டியன், முனைவர் ராஜ்குமார் மற்றும் முனைவர்.திரவியம், முனைவர் முத்துசாமி ஆகியோருக்கு அவர்களின் திட்டமிட்ட முயற்சி மற்றும் தரவுகளை அழகாகத் தொகுத்து வழங்கியதற்காக சிறப்பான பாராட்டுகள்!
இந்த ஆண்டில் நம்முடைய பவள விழாவை (Platinum Jubilee) கொண்டாடும் நிலையில், இதே ஒற்றுமையும் பெருமையும் கொண்டு நாம் தொடர்ந்து முன்னேறுவோம் என்று நம்புகிறோம்.
எங்கள் அனைத்து முயற்சிகளிலும் உங்கள் தொடர்ந்த ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறோம் என கல்லூரி முதல்வர் முனைவர் வீரபாகு தெரிவித்தார்.
முதல்வர் முனைவர். வீரபாகு நெகிழ்ச்சி :
நான் இந்த சாதனையை எங்கள் நிறுவனர் செயலாளர் குலபதி ஏ.பி.சி. வீரபாகு மற்றும் மேனாள் முதல்வர் பேராசிரியர் ஏ. ஸ்ரீனிவாச ராகவன் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்தமைக்காக கிடைத்த பெருமையை அவர்களின் பாதங்களில் அர்ப்பணிக்கிறேன் என்று நெகிழ்ச்சி கொண்டார்.













