தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் கணித மன்ற தொடக்க விழா
தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி,கணிதத் துறை, 13.8.2025 அன்று “கணித மன்ற தொடக்க விழா”வை நடத்தினர். இவ்விழாவில், சென்னை பிரெசிடென்சி கல்லூரியின் முன்னாள் முதல்வரும், கல்லூரிக் கல்வித் துறையின் முன்னாள் இணை இயக்குநருமான டாக்டர். ராவணன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார்.

துறைத் தலைவர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் வரவேற்பு உரையாற்றினார். பின்னர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது. தலைமை விருந்தினர் டாக்டர். ராவணன் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கணிதத்தின் முக்கியத்துவத்தை விளக்கி, மாணவர்கள் பகுப்பாய்வு சிந்தனை மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் ஊக்கமளித்தார்.












