தூத்துக்குடி டிலைட் பப்ளிக் பள்ளியில் துப்பாக்கி சுடு தளம் :
தமிழ்நாடு துப்பாக்கி சுடு கழக சங்கத் தலைவர் சீதா ராமராவ் துவக்கி வைத்தார்
தூத்துக்குடியில் இளம் துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்கும் வகையில், டிலைட் பப்ளிக் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடு தளத்தை தமிழ்நாடு துப்பாக்கி சுடு கழக சங்க தலைவர் சீதா ராமராவ் துவக்கி வைத்தார்.மேலும் அவர் டிலைட் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியை ஆரம்பித்து வைத்தார்.
தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் அமைந்துள்ளது டிலைட் பப்ளிக் பள்ளி. இந்தப் பள்ளியில் இளம் துப்பாக்கி சுடும் வீரர்களை உருவாக்கும் வகையில் புதிதாக 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டத்தில் மதுரை, திண்டுக்கல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தூத்துக்குடியில் டிலைட் பப்ளிக் பள்ளியில் தான் இந்த துப்பாக்கி சுடு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துப்பாக்கி சுடு கழக சங்க செயலாளர் வேல் சங்கர், துணைத் தலைவர் கிஷோர், பள்ளிச் செயலாளர் ஜெயசீலன் , பள்ளித் தாளாளர் பிரபாகரன் ஜான், பள்ளி முதல்வர் சோபியா செல்வராணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜ நட்டர்ஜி. சத்யா நிறுவன தலைவர் ஜாண்சன், பயிற்சியாளர்கள் சத்யா, அந்தோணி நட்டர்ஜி மற்றும் பர்ண பாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது













