நீட் ( UG ) 2025 தேர்வு முடிவில் முதல் 100 இடங்களில் தமிழ்நாடு 6 இடங்களை பிடித்தது.

நீட் ( UG ) 2025 தேர்வு முடிவில் முதல் 100 இடங்களில் தமிழ்நாடு 6 இடங்களை பிடித்தது.

நீட் ( UG ) 2025 தேர்வு மதிப்பெண் பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் இடம் பிடித்துள்ளனர்.

2025 – 26 ஆம் ஆண்டு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 4 ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. அதற்கான முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மாணவர்கள் முதல் 100 இடங்களில் இடம் பிடித்தனர்.

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் சூர்யநாராயணன் 99. 9987779 சதவீதம் பெற்று மதிப்பெண் தர வரிசையில் 27 வது இடம் பிடித்துள்ளார். அபிநீட் நாகராஜ் 99.9974653 சதவீதம் பெற்று 50-வது இடத்தையும், புகழேந்தி 99.99 72390 சதவீதம் பெற்று 61 வது இடத்தையும் கிருத்திக் விஜயராஜா 99.99 71484 சதவீதம் பெற்று 63 வது இடத்தையும், ராகேஷ் 99.9964 242 சதவீதம் எடுத்தூ 78வது இடத்தையும், பிரஜன் ஸ்ரீவாரி 99.9958811 செல்வதவீதம்ம் பற்றி 88 வது இடத்தையும் பிடித்துள்ளனர்