கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் அன்னை பூஜை விழா
கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளியில் கோவில்பட்டி விவேகனாந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டத்திற்கு அரிசி வழங்கும் விழா 15.12.2025ல் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளித்தலைவர் மற்றும் செயலர் அய்யனார் தலைமையேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தன்னார்வமாக கொடுக்கப்பட்ட 600கிலோவிற்கு மேல் அரிசியை கேந்திர பொறுப்பாளர் பரமகுருவிடம் வழங்கினார்கள்.

கேந்திர பொறுப்பாளர் திட்டத்தின் முக்கிய நோக்கமான கேந்திர பாலர் காப்பகத்தில் படிக்கும் குழந்தைகள், ஆசிரம குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற முதியோர்கள் உணவிற்காக வழங்கபடுவது பற்றியும் அன்னை பூஜைக்கான வேதமந்திரம் பற்றியும் மாணவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் பள்ளித்தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.












