பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு : அமைச்சர் கோவி. செழியன் தகவல்

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு : அமைச்சர் கோவி. செழியன் தகவல்

பாலிடெக்னிக் கல்லூரி மாணவ மாணவியருக்கு சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சில பாடங்களில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியருக்கு ஜூன்/ஜூலை மாதம் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டு முதலமைச்சரின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்கால நலனை கருதி மாணவர்கள் மீது தனிக் கவனம் கொண்டு உயர்கல்வி துறையில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கல்வித் தரத்தை செம்மைப்படுத்தி வருகிறது.

ஏழை எளிய மாணவர்கள் கல்வி பயின்று தகுந்த வேலை வாய்ப்பினை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பல்வேறு தொழிற்சார் பயிற்சியினை வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 2025 – ல் நடைபெற்ற பட்டய தேர்வுகளில் இறுதி பருவம் துணைத் தேர்வு எழுதிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் நிலுவை ( Arear ) வைத்துள்ளனர்.

அந்த மாணவர்கள் அடுத்த நிலையான உயர் கல்வி பயிலவோ அல்லது வேலைவாய்ப்புக்கோ செல்ல இயலாமல் இருக்கும் சூழ்நிலையினை போக்க தமிழ்நாடு முதலமைச்சர் மேற்படி மாணவர்களின் மீது மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினை வழங்க ஏதுவாக ஜூன்/ஜூலை 2025 சிறப்பு துணை தேர்வின் மூலம் தேர்ச்சி பெறாமல் உள்ள நிலுவைப் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்கிட அறிவுறுத்தி உள்ளார்கள்.

அதன்படி

இம்மானவர்களுக்கு தற்பொழுது ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மேலும் இது குறித்த விவரங்கள் அனைத்தும் https://dte.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் இந்த இணையதளத்தின் மூலமாக விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

மேலும் ஜூன் /ஜூலை 2025 சிறப்பு துணை தேர்வுக்கு கீழ் குறிப்பிட கால அட்டவணைப்படி விண்ணப்பிக்கலாம்.

ஜூன்/ஜூலை 2025 சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அட்டவணை.

இணைய வழியின் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப நாள் :

18 – 06 – 2025 புதன்கிழமை.

கடைசி நாள்:

23 – 6 – 2025 திங்கட்கிழமை இரவு வரை.

தேர்வு நுழைவு சீட்டு பதிவேற்றம் செய்யப்படும் நாள் :

25 -6 – 2019 புதன்கிழமை.

கருத்தியல் தேர்வுகள் நடைபெறும் நாட்கள் :

30 – 6 – 2021 திங்கள் முதல்

16 – 7 – 2025 புதன்கிழமை
வரை.

செய்முறை தேர்வுகள் நடைபெறும் நாட்கள் :

17- 7 – 2025 வியாழக்கிழமை முதல்
25 -7 – 2025 வெள்ளிக்கிழமை வரை.

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் :

30 – 7 – 2025 புதன்கிழமை.

தேர்வுக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணம் ரூபாய் 30 /- மட்டும்.

ஒரு பாடத்திற்கான தேர்வுக் கட்டணம் – ரூபாய் 65/-

மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.