தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் “பாரம்பரியம், பண்பாடு மற்றும் தொழில்நுட்ப புதுமைகள்” என்ற தலைப்பில் வரலாற்றுத்துறை மற்றும் தமிழக அரசு,தொல்லியல் துறை இணைந்து இரண்டு நாள்கள் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை நடத்தியது.

17.02.2026 அன்று கல்லூரியிலும் 18.02.2026 அன்று இணைய வழியிலும் நடைபெற்ற இக்கருத்தரங்கத்தில் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர்.சங்கீதா வரவேற்புரை ஆற்றினார் . கல்லூரி முதல்வர் முனைவர். சுப்புலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். 188 கட்டுரைகள் அடங்கிய ஆய்வுத் தொகுப்பு வெளியீடு செய்யப்பட்டது.

இம்மாநாட்டில் 16 கல்லூரிகளைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 90 பேராளர்கள் கட்டுரைகளை வாசித்தனர்.

காளீஸ்வரன் ( தொல்லியல் துறை அலுவலர்,திருநெல்வேலி) “சமீபத்திய தொல்பொருள் ஆதாரங்கள் மூலம் தமிழ்ப் பண்பாட்டை மறுபரிசீலனை செய்தல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.பரத் குமார் ( தொல்லியல் துறை அலுவலர், திண்டுக்கல்) “தமிழ்நாட்டில் தொல்பொருள் அகழாய்வில் பயன்படுத்தப்படும் அறிவியல் முறைகள்” குறித்து விளக்கமளித்தார். புவனேஸ்வரன் (தொல்லியல் சிறப்பு ஆய்வாளர்,மதுரை) “நடுகற்களின் ஆவணப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு” பற்றி கருத்துரை ஆற்றினார்.

டாக்டர்.அனுராதா ராஜசேகரன் (முதுநிலை விரிவுரையாளர், இந்தியக்கல்வி ஆய்வாளர்,மலாயா பல்கலைக்கழகம்,மலேசியா) “மலேசிய இந்தியர்களின் பண்பாட்டு வரலாற்றை மறுபரிசீலனை செய்தல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

சுகந்தி இன்பராஜ் (ஆல்ஃபா ஒமேகா தகவல்துறை,சிகாகோ) “பாரம்பரிய புதுமைகளில் சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” குறித்து உரையாற்றினார்.

கட்டுரை வாசிக்கும் அமர்வுகளுக்கு வரலாற்றுத்துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் டாக்டர் தேவராஜ் (காமராஜ் கல்லூரி,தூத்துக்குடி) மற்றும் வரலாற்றுத் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் டாக்டர்.பேச்சிமுத்து (கீதா ஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,தூத்துக்குடி) தலைமை வகித்தனர்.

நிறைவு விழாவில் திருமதி.பூர்ணிமா திலகம் (வரலாற்றுத்துறை,உதவிப் பேராசிரியர்) நன்றியுரை நல்கினார்.

இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை வரலாற்றுத்துறைத் தலைவர், பேராசிரியர்கள், மாணவியர் அனைவரும் இணைந்து செய்திருந்தனர்.