அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் தரவரிசை பட்டியல் மே 29 -ம் தேதி முதல் வெளியிடப்படும் :
உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
“அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் 2025-2026-ம் கல்வி ஆண்டில் பட்டப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி நேற்றுடன் (மே 27) முடிவடைந்தது.
மொத்தம் 2 லட்சத்து 25 ஆயிரத்து 705 பேர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர்.அதில் 1,84,762 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர்.
அவர்களில் மாணவிகள்1,0 8 619 பேர்.
மாணவர்கள் 76,0 65 பேர்.
மூன்றாம் பாலினத்தவர் 78 பேர்.
தரவரிசை பட்டியல்
இதனை தொடர்ந்து, சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் மே 29-ம் தேதியும் பொதுப்பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ம் தேதியும் அரசு கல்லூரிகளில் வெளியிடப்படும், இந்த பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்படுவதுடன் கல்லூரி இணை்யதளத்திலும் வெளியிடப்படும்
கலந்தாய்வு
மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 3-ம் தேதியும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 4 முதல் 14-ம் தேதி வரையும் நடைபெறும். கலந்தாய்வு தொடர்பான தகவல் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அந்தந்த கல்லூரிகளில் இருந்து அனுப்பப்படும்.

மீண்டும் விண்ணப்ப பதிவு
மே 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் மற்றும் துணைத்தேர்வெழுதும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆன்லைன் விண்ணப்ப பதிவு மீண்டும் மே 30-ம் தேதி தொடங்கும்.
ஜீன் 30 வகுப்புகள் ஆரம்பம்
மாணவர் சேர்க்கைகள் முடிவடைந்த உடன் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் ஜூன் 30-ம் தேதி ஆரம்பமாகும் என்று அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.












