கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெண்களின் உடல் நலம் மற்றும் உடல் தகுதி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகளைத் தகர்க்கும் வகையில் பெண்களின் உடல் நலம் மற்றும் உடல் தகுதி குறித்த கட்டுகதைகளை உடைத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சியானது கலையரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் ஆரோக்கியம், சரியான உணவு முறை, பருவகால பராமரிப்பு உடற்பயிற்சியின் அவசியம் உடல் எடை குறைப்பு தொடர்பான தவறான நம்பிக்கைகளை கலைக்கும் வகையில் டாக்டர். செண்பகவல்லி பிஸியோதரபிஸ்ட் சிறப்புரையாற்றினார். பெண்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சரியான விழிப்புணர்வு அவசியம் என்பதையும் வலியுறுத்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் கேள்வி பதில் அமர்வு நடைபெற்றது. அதில் மாணவியரும்,பேராசிரியர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல சந்தேகங்களை தீர்த்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியானது கல்லூரி தாளாளர் விஜயன் ஆலோசனையின் பேரில் கல்லூரி முதல்வர் முனைவர்.அண்ணாமலைசாமி தலைமை தாங்கினார். ஹெல்த் கேர் கிளப் ஒருங்கிணைப்பாளர் பிரபாதேவி வரவேற்ப்புரை ஆற்றினார். டாக்டர். லாவண்யா ஹெல்த் கேர் கிளப் உறுப்பினர் நன்றியுரை ஆற்றினார்.












