சிறுவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த பொம்மலாட்டம் கலை நிகழ்ச்சி மூலம் எடுத்துரைத்தல்
தூத்துக்குடி மறைமாவட்டம் தருவைக்குளத்தில் நடைபெற்ற குழந்தைகளுக்கான விடுமுறை வேதாகம பள்ளி நிகழ்வுக்கு பங்கு தந்தை அருட்பணி வின்சென்ட் அடிகளார் ஆசியுடன் வெள்ளிக்கிழமை 9.05.2025 காலை 9 மணிக்கு சிறார்களிடையே அலைபேசி பயன்படுத்துவதை தவிர்த்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதை வலியுறுத்தி தூத்துக்குடி புத்தக வாசிப்பு நற்பணி மன்றம், கலையின் குரல் அமைப்பு மற்றும் குமிழ் முனை புத்தக வாசிப்பு வண்டி இணைந்து பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி குழு சார்பில் நடைபெற்றது.
பொம்மலாட்ட குழுவில் அரங்கம் மற்றும் நாட்டுப்புற கலைப்பயிற்றுநர் கலைவளர்மணி சக்திவேல், குமிழ்முனை சைமன், வீதிநாடகக் கலைஞர் அருண்பாமா , எழுத்தாளர் மாரிமுத்து ஆகியோர் சிறார்களுக்கு பொம்மலாட்டம் நிகழ்வு நடத்திக் காட்டி மகிழ்வித்தனர்.
இந் நிகழ்ச்சியில் திரளனான குழந்தைகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை மற்றும் ஊர் நிர்வாகிகள் அருட் சகோதரிகள் மற்றும் அனைத்து சபைகளும் செய்திருந்தனர்.












