தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் கைத்தொழில் பயிற்சி பணிமனை

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் கைத்தொழில் பயிற்சி பணிமனை

தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி, ஆங்கிலத் துறை, கல்லூரி நிறுவனத்தின் புதுமை கண்டுபிடிப்பு மன்றம் உடன் இணைந்து, “கேக் தயாரிப்பு மற்றும் வணிகப்படுத்துதல்” என்ற தலைப்பில் கைத்தொழில் பயிற்சி பணிமனை 21.01.2026 அன்று நடத்தியது.

இந்த கைத்தொழில் பயிற்சி பணிமனை, ஆங்கிலத் துறையைச் சேர்ந்த 40 முதுநிலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. உள்ளூர் சந்தையை இலக்காகக் கொண்டு, ஆர்வத்தை வணிகமாக மாற்றுவது என்பதே இந்தப் பணிமனையின் முக்கிய நோக்கமாக இருந்தது.

கேக் தொழில்முனைவோர் சபீனா ஃப்ரேசர், மாணவர்களுக்கு தாங்களே கேக் தயாரிக்கும் பயிற்சி, கேக் ஐசிங் செய்வது, சுவை இணைப்புகள் மற்றும் வணிகத் உத்திகள் குறித்து விளக்கி செயல்முறைப் பயிற்சியளித்தார்.