2024 2025 கல்வி ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார் தெரிவி முடிவுகள் தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளன தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாகவும் அறியலாம்.
பிளஸ் டூ பொதுத்தேர்வில் மாணவிகள் வழக்கமாக மாணவர்களை விட அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 7,53,142 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்னர். இதில் 4,05,472 ( 96.70%) மாணவிகள், மாணவர்கள் 3,47,670 (93.16%)பேர் தேர்ச்சி பெற்றுள்னர்.

மாணவர்களை விட மாணவிகள் 3.54 சதவீதம் தேர்ச்சி அதிகமாக பெற்றுள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஏராளமான மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளனர்.
தமிழ் – 135 இயற்பியல் -1125 வேதியல் -3181 உயிரியல் -827 கணிதம் -3022 தாவரவியல் – 269 விலங்கியல் – 36 வணிகவியல்- 1624 கணக்குப்பதிவியல் – 1240 பொருளியல் – 556, கணினிப் பயன்பாடு – 4208 வணிகக் கணிதம் மற்றும் புள்ளியில் பாடத்தில் – 273 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களில் எடுத்து சாதனைப்படைத்துள்ளனர்.












