பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டுப் பயிற்சி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு சிறப்பாக
செயல்பட்டு வருகின்றன.
பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்தும் விதமாக தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக தூத்துக்குடி நகர்ப்புறம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு பயிற்சி தூத்துக்குடி நகர் புறம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேலூரில்
வைத்து நடைபெற்றது.
மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் கடிதத்தின் படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழிகாட்டுதலின் படி, மாவட்ட திட்ட அலுவலர் முனியசாமி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூடலிங்கம் ஆலோசனையின் படி இப்பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் 64 பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி உறுப்பினர்களை வரவேற்று பேசினார்.
மாநில அளவிலான பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் சந்தியா, குணப்ரியா, அழகேசன் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர் காசிராஜன் பயிற்சியில் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார். இப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர்ப்புறம் வட்டார வள மையம் மேற்பார்வையாளர் பொறுப்பு பார்வதி மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர்.













