+1,+2 விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏப்ரல் 18ஆம் தேதி புனித வெள்ளியும், ஏப்ரல் 20-ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் இடையில் 19ஆம் தேதி மட்டும் விடைத்தாள் திருத்தும் பணி இருப்பதால் அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதனை ஏற்று 19 ம் தேதி சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 4 ம் தேதி முதல் ப்ளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
இந்தப் பணியில் 43,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.












