கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சி!

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 % தேர்ச்சி!

கோவில்பட்டி நாடார் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2025 26 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பாக இன்று பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழா கோவில்பட்டி நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் ரமேஷ் வழிகாட்டுதலின்படி உப தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். உறவின்முறை சங்க செயலாளர் ஜெயபாலன்,சங்க பொருளாளர் சுரேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிச் செயலாளர் அட்வகேட் செல்வம், பள்ளி பொருளாளர் பாஸ்கரன், பள்ளிக்குழு உறுப்பினர்கள் செல்வம், செந்தில்குமார் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர் .

பள்ளி முதல்வர் பிரபு அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக எஸ்எஸ்டிஎம் கல்லூரி செயலாளர் சுமி கண்ணன் கலந்து கொண்டு SSDM கல்லூரி சார்பாக மாணவர்களுக்கு நினைவுப்பரிசுள் வழங்கினார்.

பள்ளி அளவில் 485 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்ற மாணவர் சூரிய பிரகாஷ், 2 ம் இடம் 482 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் அனுஜா மற்றும் வினேகா, 478 மதிப்பெண்கள் பெற்று 3 ம் இடம் பிடத்த மாணவர் சண்முகராஜா ஆகியோருக்கு உறவின்முறை சார்பாகவும், பள்ளி குழு சார்பாகவும், பள்ளியின் சார்பாகவும் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

இதுபோல் 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 14 மாணவர்களுக்கும் , பாடங்களில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கும், 400 மதிப்பெண்கள்வரை பெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியப் பெருமக்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி, மாணவர்களின் கல்வி நிலைப்பாடு குறித்து உறவின்முறை பெரியோர்கள் வாழ்த்து தெரிவித்து அனைவரையும் பாராட்டினர்.

இந்த நிகழ்வில் ஆசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.