தூத்துக்குடி, ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில்  ஓணம் திருவிழா!

தூத்துக்குடி, ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில்  ஓணம் திருவிழா!

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி பெண்கல்வியில் தன்னிகரற்று செயல்பட்டு வருகிறது. கல்லூரியானது கல்விப்பணியோடு பன்முக கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் நாகரிகத்தையும் பாரம்பரியத்தையும் மாணவிகளுக்கு கருத்தரங்குகள் வழங்கியும் போட்டிகள் நிகழ்த்தியும் விழாக்கள் அரங்கேற்றியும் கற்பித்தும் வளர்த்தும் வருகின்றது.

அந்தவகையில் 25.08.2026 அன்று கேரள பண்பாட்டு விழாவான “ஓணம் திருவிழா” கல்லூரியில் கொண்டாடப்பட்டது. அவ்விழாவின் முன்னேற்பாடாக 21.08.2026 அன்று “அத்தப்பூ கோலப் போட்டி” நுண்கலை மன்ற (Fine Arts) பேராசிரியர்களால் நடத்தப்பட்டது. அனைத்துத்துறை சார்ந்த மாணவிகளும் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதில் கணிதத்துறை சார்ந்த மாணவிகள் ஹரிதா ராணி மற்றும் அனு பரமேஸ்வரி முதற்பரிசும் இரண்டாம் பரிசு அனுசூயா லட்சுமி மற்றும் பொன் கெளசல்யா மூன்றாம் பரிசு நந்தினி ஆறுமுககனியும் பெற்றனர்.

மேலும் பேராசிரியர்களும் மாணவிகளும் அலுவலக பணியாளர்களும் ஓணம் திருவிழாவைச் சிறப்பிக்கும் வகையில் ஓணம் பண்டிகைக்கான பண்பாட்டு ஆடையினை உடுத்தி கலை நிகழ்வுகளோடு ஓணம் திருவிழாவைச் சிறப்பித்தனர்.

இதனை கல்லூரியின் நுண்கலை மன்ற (Fine Arts) குழுவைச் சார்ந்த பேராசிரியர்கள் இனிதே நடத்தினர்.