மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்

குறைந்தது 50 மாணவர்களுக்கு மேல் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க அனுமதி அளித்து அரசாணை வெளியீடு!

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் 2025- 2026 – ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு வரிசை எண் .12 – இல் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவினை கவனமுடன் பரிசீலனை செய்து அதனை ஏற்று , ” பள்ளியின் சிறந்த செயல்பாடுகளை பள்ளிக்கு அருகாமையில் உள்ள பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் குடியிருப்புகளில் வசிக்கும் விளம்பரங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகளின் மூலம் அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பற்றி விளக்கி , கடந்த ஆண்டைவிட குறைந்தபட்சம் 50 மாணவர்களை கூடுதலாகச் சேர்க்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்க ” அனுமதி அளிக்கலாம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.