தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரி மாணவர்கள் – AICCI தேசிய ஸ்டார்ட்அப் மாநாடு 2026-ல் முதல் பரிசு வென்றுள்ளனர் !
AICCI தேசிய ஸ்டார்ட்அப் மாநாடு 2026-ல் வ. உ. சிதம்பரம் கல்லூரியின் கணினி அறிவியல் துறை மாணவர்கள், 2026 ஆம் ஆண்டுக்கான AICCI தேசிய ஸ்டார்ட்அப் மாநாட்டில், துறைமுகம் மற்றும் தளவாடத் துறை (Port & Logistics Sector) பிரிவில் முதல் பரிசை வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த உச்சி மாநாடு 20 மற்றும் 21 ஆகஸ்ட் 2026 ஆகிய தேதிகளில் ஏவிஎம் கமல்வேல் மஹாலில் நடைபெற்றது.
அனைத்து துறைகளிலும் இருந்து மொத்தம் 1,098 விண்ணப்பங்களும், துறைமுகம் மற்றும் தளவாடத் துறையில் மட்டும் 89 விண்ணப்பங்களும் பெறப்பட்டன. அவற்றில் வ.உ.சி மாணவர் குழு முதல் 10 அணிகளில் (Top 10) ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டு, தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை வென்று பெருமை சேர்த்துள்ளது.

🏆 வெற்றி பெற்ற மாணவர் குழு:
* K. குருபிரசாத்
* A. முருகேசன்
* S. பிரேம்குமார்
* E. முத்துக்குமார்
* H. மந்திரசக்தி
இளநிலை முதலாம் ஆண்டு கணினி அறிவியல்
இந்த மாபெரும் சாதனையைப் படைத்த மாணவர்களுக்கு கல்லூரியின் மதிப்பிற்குரிய செயலர் அவர்கள், நிர்வாகத்தினர், முதல்வர் அவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் சார்பாக இதயம் கனிந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.












