தூத்துக்குடியில் உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம் : மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது !

தூத்துக்குடியில் உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம் :
மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது !

இன்று (21.08.26) தூத்துக்குடி   மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம் தூத்துக்குடி சுப்பையா வித்தியாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில்  2025- 26 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத மாணவர்களில் இதுவரை உயர் கல்வியில் சேராதவர்கள் சுமார் 220 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என மொத்தம் சுமார் 480 பேர் கலந்து கொண்டனர்.

இம்மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த வழிகாட்டல் வழங்கி நேரடி சேர்க்கை ( Polytechnic, ITI, Arts & Science / Engineering) நடைபெற்றது. இம் முகாமிற்கு முதன்மைக்கல்வி அலுவலர் முன்னிலை வகித்தார்கள். மாவட்டக்கல்வி அலுவலர், உதவி திட்ட அலுவலர், தலைமை ஆசிரியர்கள்,  CG ஆசிரியர்கள், Nandi foundation கருத்தாளர்கள்,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களின் முகாம் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.