கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் நூல் வெளியிட்டுவிழா மற்றும் விருது வழங்கும் விழா !

கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் இன்று 15.8.26 முத்தமிழ் மன்றம் சார்பில் கோவில்பட்டி நாடார் காமராஜ் பதின்ம மேல்நிலைப் பள்ளி முதல்வர் பிரபு எழுதிய ” ஏ குருவி சிட்டுக்குருவி” என்ற சிறார் சிறுகதை புத்தகத்தை நாடார் மேல்நிலைப்பள்ளி செயலாளர் வழக்கறிஞர் ரத்தினராஜா வெளியிட நாடார் காமராஜ் பதின்ம மேல்நிலைப் பள்ளி செயலாளர் வழக்கறிஞர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். மேலும் இந்த நிகழ்வில் 2025-26 கல்வியாண்டில் அரசுப் பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 -ஆம் வகுப்பில் தமிழ்ப் பாடத்தில் தத்தம் பள்ளிஅளவில் முதல் இடம் பெற்ற 108 மாணவர்களுக்கு முத்தமிழ் அறிவுச்சுடர் விருதும், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற வைத்த ஆசிரியர்களுக்கு முத்தமிழ் ஆசிரியச்சிகாமணி விருதும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் நாடார் மேல்நிலைப்பள்ளி பொருளாளர் விஜயகுமார், உறுப்பினர்கள் தனவேல்முருகன் மற்றும் வெங்கடேஷ், உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் தலைமை கரண ஆசான் தமிழ்ச்செம்மல் பேரா. கருத்தப்பாண்டி, ஏசியாஃபார்ம்ஸ் நிறுவனர் பாபு, தொழிலதிபர் ரவி மாணிக்கம், ஆசிரியரும் எழுத்தாளருமான தங்கதுரையரசி, உலக திருக்குறள் கூட்டமைப்பு பொருளாளர் ஜெயா ஜனார்த்தனன் தம்பதியர்,ஆசிரியர்கள் துரைராஜ், செல்வின், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க கோவில்பட்டி கிளை தலைவர் மணிமொழிநங்கை, பொருளாளர் கண்ணகி, முத்தமிழ் மன்றம் நிர்வாகிகள் ஆசிரியை லதா தேவி மற்றும் பேராசிரியை சிவசங்கரி, திருவில்லிபுத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முன்னாள் முதல்வர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏ குருவி சிட்டுக்குருவி நூல் ஆசிரியர் பிரபு ஏற்புரை வழங்கினார். முத்தமிழ் மன்றத் தலைவர் வரகவி நல்லாசிரியர் முருகேசன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் பெற்றோர்கள் ஆசிரியர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.













