சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரியில் 80 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்!

சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரியில் 80 வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் , சாயர்புரம் டாக்டர் ஜி.யு.போப் கல்வியியல் கல்லூரியில் 80வது சுதந்திர தின விழா 15.08.2026 (சனிக்கிழமை) இன்று காலை கொண்டாடப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கல்லூரியின் தாளாளர் Dr.ஆலயமணி வழிகாட்டுதலின்படி கல்லூரியின் முதல்வர் Dr.அம்சவேணி காலை 9.00 am மணிக்கு தேசிய கொடியினை ஏற்றி விழாவினை சிறக்க செய்தார்.

முதல்வர் டாக்டர்.அம்சவேணி சுதந்திரம் இலவசமாக நமக்கு கிடைக்க வில்லை ,பல தலைவர்களின் இரத்தத்தினாலும், தியாகத்தினாலும் கிடைத்தது. மாணவ ஆசிரியர்களாக நீங்கள் நாளைய தலைமுறையினருக்கு நமது இந்திய நாட்டின் சரித்திரத்தையும், தேசிய கொடியின் பெருமையும் கூறி நல்ல குடிமகனாக மாணவ-மாணவியர்களை உருவாக்க வேண்டியது நமது கடமை என்று கூறி சிறப்புரை ஆற்றினார்.

மேலும் இருபால் உதவி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ ஆசிரியைகள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர். இறுதியில் நாட்டுப்பண் முழங்கி இனிப்புகள் வழங்கப்பட்டு இவ்விழா நிறைவு பெற்றது.