கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சேர்க்கை துவக்கம்: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி சேர்க்கை துவக்கம்:
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதல்வர் மணி தெரிவித்த தகவல்:

தூத்துக்குடி மதுரை கோட்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமாக செயல்படும் தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025 – 26 ஆம் கல்வி ஆண்டுக்கான முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு மாணவர்கள் சேர்க்கை இணைய வழி மூலமாக மே மாதம் 15 ஆம் தேதி துவங்கியுள்ளது. இப்பயிற்சியில் சேர விரும்பம் உள்ளவர்கள் www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை ஜூன் மாதம் 20 ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியின் காலம் – 1 வருடம்

பருவங்கள் ( Semester ) – 2

கல்வித் தகுதி :

குறைந்தபட்சம் +2 வகுப்பில் தேர்ச்சி.

10 வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பட்டயப் படிப்பு ( Diploma ) ( 10 +3 பட்டயப் படிப்பு ), மற்றும்
பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

01 – 07 – 2025 அன்று 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு இல்லை.

பயிற்சி மொழி :

பட்டயப் பயிற்சிக்கான வகுப்புகள் தமிழில் மட்டுமே நடத்தப்படும்.
தேர்வுகளை தமிழ் மட்டுமே எழுத வேண்டும்.

சேர்க்கை :

மாணவர் சேர்க்கைக்கான அதிகாரப்பூர்வமான இணையதள முகவரி www.tncu..tn.gov.in

இந்த இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

கட்டணம் :

விண்ணப்ப கட்டணம் ரூபாய் 100 /-ஆகும்.
விண்ணப்ப கட்டணத்தை இணைய வழி மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

மேலும் பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மேற்படி இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பதிவேற்றம் செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப நகலையும், சான்றிதழ் நகல்களையும் சுய ஒப்பமிட்டு மேலாண்மை நிலையத்திற்கு சான்றிதழ்களை சரிபார்க்க நேரில் கொடுக்க வேண்டும்.

பயிற்சியில் சேர்வதற்கு தகுதி பெற்றவர்கள் விவரம் பயிற்சி நிலையம் மூலம் தெரிவிக்கப்படும்.

தேர்வு செய்யப்பட்ட பயிற்சியாளர்கள் பயிற்சிக்கான கட்டணம் ரூபாய் 20,750 /- ஐ ஒரே தவணையில் இணைய வழி மூலமே செலுத்த வேண்டும்.

மேலும் தகவல்களுக்கு 0461 – 2334555 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் முதல்வர் மணி தெரிவித்தார்