தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் களப்பயணம்
தூத்துக்குடி வ.உ.சி.கல்வியியல் கல்லூரியின் தமிழ்த்துறை,வரலாற்றுத்துறை,ஆங்கிலத் துறை,கணிதத்துறை,உயிரறிவியல்துறை, பொருளறிவியல் துறைகளைச் சேர்ந்த 87 இளங்கல்வியியல் இரண்டாமாண்டு மாணவர்கள், 10 பேராசிரியர்கள்,1 அலுவலகப் பணியாளர் கொண்ட குழுவினர் 6-2-2026 வெள்ளிக்கிழமை ஒருநாள் களப்பயணம் மேற்கொண்டனர்.

இப்பயணத்தில் கிருஷ்ணாபுரம் கோவில்,பொருநை அருங்காட்சியகம், அறிவியல் மையம்,நெல்லையப்பர் கோவில் ஆகிய இடங்களுக்குச் சென்று சிற்பக்கலை,தமிழர் தொன்மை அகழாய்வுச் சான்றுகள்,அறிவியல் கண்டுபிடிப்புகள் என பலவற்றையும் ஆய்வு நோக்கில் பார்வையிட்டனர்.
கல்லூரியில் காலை 8 மணிக்கு புறப்பட்ட பேருந்தில் களப்பயணம் செய்த மாணவர்கள் மேற்கண்ட நான்கு இடங்களையும் கண்டபின் மாலை 6.30 மணியளவில் கல்லூரியை வந்தடைந்தனர.

இக்களப்பயணதிற்கான வாகன வசதி மற்றும் காலை சிற்றுண்டியினை மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இப்பயணம் கல்லூரி முதல்வர் முனைவர்.கனகராஜ் தலைமையில், ஒருங்கிணைப்பாளர்கள் (துறைத்தலைவர்கள்) முனைவர் பாபு,முனைவர்.ராஜதுரை, பிரியா,முனைவர்.அல்லிமுத்து,முனைவர். தவசுபா,முனைவர்.குரு வாசுகி ஆகியோர் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் கவிதா,ரூபினா தனசுதா, ரம்யா ஆகியோர் இக்களப்பயணத்தை வழிநடத்தினர்.













