கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் நாட்டின் 80 வது சுதந்திரதினவிழா : பள்ளித் தலைவர் அய்யனார் தேசியக் கொடியேற்றினார்!

கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் நாட்டின் 80 வது சுதந்திரதினவிழா :
பள்ளித் தலைவர் அய்யனார் தேசியக் கொடியேற்றினார்!

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்பநாடார் மேல்நிலைப்பள்ளியில் 80வது சுதந்திரதினவிழா நடைபெற்றது.

11-ம் வகுப்பு மாணவி பிரபாவதி வரவேற்புரையாற்றினார்.பள்ளித்தலைவர் மற்றும் செயலர் அய்யனார் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி விழாவை  தொடங்கி வைத்தார்.

பள்ளி நிர்வாகி ஜெயபிரியா அய்யனார்  முன்னிலை வகித்தார். மதநல்லிணக்க வாசகங்கள் மாணவர்கள் வாசித்தார்கள்.


எட்டாம் வகுப்பு மாணவன் அருள்வேல் “மாணவர்கள் கையில் இந்தியா” என்ற தலைப்பிலும், எட்டாம் வகுப்பு மாணவன் இதிகாந்த் “விடுதலை போராட்ட வீரர்” என்ற தலைப்பிலும் ஏழாம் வகுப்பு மாணவி விதுர்சனா “பகத்சிங்” என்ற  தலைப்பிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றினார்.

பதினொன்றாம் வகுப்பு மாணவி அபிநயா பேரரசி “தமிழக விடுதலை போராட்ட வீரர்கள்” என்ற தலைப்பிலும்
மற்றும் 11ம் வகுப்பு மாணவி செல்வி “சுதந்திர தினவிழா” என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள்.

பாரதமாதா,சுப்பிரமணியபாரதி, ஜான்சிராணி, பகத்சிங், வேலுநாச்சியார், குயிலி,போன்ற விடுதலைப் போராட்ட
வீரர்கள் வேடமணிந்து அவர்களின் தியாகங்களையும், வீரத்தையும் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பள்ளித்தலைவர் மற்றும் செயலர்,பள்ளி நிர்வாகி, பள்ளித் தலைமை ஆசிரியர் வெங்கடேசன்,
உதவித் தலைமை ஆசிரியை சுஜாதா ஆகியோர் பரிசுகள் வழங்கி
பாராட்டினார்கள்.

இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டு விழா நிறைவுற்றது.விழா ஏற்பாடுகளை வரலாற்று ஆசிரியர்கள் செய்திருந்தனர்.