தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நிறுவனர் வீரபாகு நினைவு தினம் அனுசரிப்பு !
தூத்துக்குடி ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் 13-08-2026 நேற்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கணிதவியல்,முதுஅறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பாக நிறுவனர் ஏ.பி.சி தின விழா நினைவு கூறப்பட்டது.
விழாவின் தொடக்க நிகழ்வாக நிறுவனர் குலபதி ஏ. பி. சி. வீரபாகு பிள்ளை திரு உருவச் சிலைக்கு முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் மலரஞ்சலி செலுத்தி குலபதியின் உயரிய கொள்கைகளை நினைவு கூர்ந்தனர்.
தொடர்நிகழ்வாக கல்லூரிக் கலையரங்கில் கணிதத்துறை இணைப்பேராசிரியர் முனைவர்.ராதா வரவேற்புரை நல்கினார். முதல்வர் முனைவர்.பழநி வாழ்த்துரை வழங்கி நிறுவனரின் பொது சேவைகளை நினைவூட்டினார்.
ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் முனைவர்.வடிவுக்கரசி சிறப்புரை ஆற்றினார்.
நினைவு தினத்தை முன்னிட்டு ஏ. பி. சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு “ஏழைகளின் ஏந்தல் ஏ. பி. சி. வீ” என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், பள்ளி மாணவர்களுக்கு இடையிலான “ஏழைகளின் ஏந்தல் ஏ. பி. சி. வீ” என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டன.
கவிதைப் போட்டி :
முதல் பரிசு :
சக்தி எம். எஸ். நந்தீஸ்வரர் XI B – ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி,
இரண்டாம் பரிசு :
மரிய ஷாலினி X B – எக்ஸன் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி,
மூன்றாம் பரிசு :
கே. ஷெஃபிரின் இம்மானுவேல் XI A – கிரஸண்ட் மேல்நிலைப்பள்ளி தூத்துக்குடி.
பேச்சுப்போட்டி :
முதல் பரிசு :
U. லோகிதா பிரியா முதுஅறிவியல் இரண்டாம் ஆண்டு கணிதவியல் துறை,
இரண்டாம் பரிசு :
A. ஜெபா இளங்கலை இரண்டாம் ஆண்டு தமிழிலக்கியம்,
மூன்றாம் பரிசு :
P. முத்து செல்வி இளம் அறிவியல் மூன்றாம் ஆண்டு இயற்பியல் துறை.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
இறுதி நிகழ்வாக தமிழ்த்துறை மாணவிகள் சார்பாக “குலபதி மண்ணின் திருமைந்தரா மாநிலத்தின் பெருமைந்தரா” என்ற தலைப்பில் பட்டி மன்றம் நடத்தினார்கள்.
சங்கரலிங்கம்,முதுகலை பட்டதாரி ஆசிரியர் (பணி நிறைவு) பட்டிமன்ற நடுவராக இருந்தார்.
- தொடர்ந்து கணிதத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.மகாலட்சுமி நன்றியுரை கூற நாட்டுப் பண்ணுடன் விழா நிறைவு பெற்றது.












