கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சரஸ்வதிபூஜை கொண்டாட்டம்
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சரஸ்வதி பூஜை ஆனந்தம் மற்றும் ஆன்மீக சூழலில் கொண்டாடப்பட்டது.
முதலில் மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ஒன்றிணைந்து சரஸ்வதி தேவியை வழிபட்டனர். பூஜைக்கு தேவையான அனைத்தும் சீராக அலங்கரிக்கப்பட்டு அன்னையரின் படத்திற்கு மலர்கள், விளக்குகள் மற்றும் நறுமணத் தூபங்கள் அர்ப்பணிக்கப்பட்டன.

பூஜை நிகழ்வில் மாணவ, மாணவியர்கள் சரஸ்வதி பாடலை பாடி துதித்தனர். கல்லூரி முதல்வர் அண்ணாமலைசாமி உரையாற்றி கல்விக்கே அடிப்படை தெய்வமாக விளங்கும் சரஸ்வதி தேவியின் அருளால் மாணாக்கர்கள் கலை மற்றும் அறிவியல் திறமையில் உயர்ந்து விளங்கவேண்டும் எனறு வாழ்த்தினார். பின் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு மாணவிகளின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் விழாவிற்கு சிறப்பை சேர்த்தன.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களும், பேராசியர்களும்,அலுவலர்களும் உற்சாகமாக கலந்துகொண்டு விழாவினைச் சிறப்பு செய்தனர்.
இவ்விழாவிற்க்கான ஏற்பாட்டை தமிழ்த்துறை பேராசிரியர்கள் பாரதி , லில்லி, ரவினாமாரி ஆகியோர் செய்திருந்தனர்.












