தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் ‌ 75 வது ஆண்டு  பவள விழாவை முன்னிட்டு இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது : கள்ளிக்குளம் திருநெல்வேலி தெஷணமாற நாடார் சங்கம் கல்லூரி சாம்பியன்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் ‌ 75 வது ஆண்டு  பவள விழாவை முன்னிட்டு இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது :
கள்ளிக்குளம் திருநெல்வேலி தெஷணமாற நாடார் சங்கம் கல்லூரி சாம்பியன்!

தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் 75 வது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு தமிழ்த்துறை சார்பாக 12.08.2026 அன்று “உயிர்மெய்” தலைப்பில் இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டது. தூய மரியன்னை கல்லூரி முதல்வர் முனைவர்.ஷிபானா சிறப்பு விருந்தினராக வருகை தந்து நிகழ்வினை துவக்கி வைத்துச் சிறப்பித்தார்.

வ. உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு நிகழ்விற்குத் தலைமை தாங்கினார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற இப்போட்டிகளில் 19 கல்லூரிகள் பங்கு பெற்றது. ஹைக்கூ, படிமப் பொருள்கோள், பாணர்களம், சொற்போர் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

பெரும்பான்மை புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த வெள்ளிச் சுழற்கோப்பையை கள்ளிக்குளம் திருநெல்வேலி தெஷணமாற நாடார் சங்கம் கல்லூரி வென்றது.