கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சங்க தொடக்க விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது!
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பில் துறைசார் சங்கத்தின் தொடக்க விழா மற்றும் “Learn to Lead in Artificial Intelligence” என்ற தலைப்பிலான கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி தாளாளர் விஜயன் விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் பிரபு தலைமை உரையாற்றினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலைவாணி,உதவி பேராசிரியர் கணினி அறிவியல் துறை SRNM கல்லூரி சாத்தூர், கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, அதன் பயன்பாடுகள் மற்றும் எதிர்கால வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துகளை வழங்கினார். கருத்தரங்கில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பல்வேறு தகவல்களைப் பெற்றனர்.
நிகழ்ச்சி மாணவர்களின் அறிவு மற்றும் தலைமைத்துவத் திறனை மேம்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.இந்நிகழ்வில் கணினிஅறிவியல் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.













