நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி – தாளூர் ) யில் டிஜிட்டல் மாற்றம் – சிறப்பு பயிலரங்கம் :

நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி – தாளூர் ) யில் டிஜிட்டல் மாற்றம் – சிறப்பு பயிலரங்கம் :

நீலகிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் பள்ளி சார்பில் “டிஜிட்டல் மாற்றம்: தொழில்நுட்பத்தின் எதிர்காலத்தை வடிவமைத்தல்” என்ற தலைப்பில் சிறப்புப் பயிலரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியானது, கணினி அறிவியல் துறையின் (Dean) புலன் முதன்மையர் முனைவர்.சிராஜுதீன் வரவேற்புரையுடன் தொடங்கப்பட்டு. தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர்.பாலா சண்முகதேவி, கல்லூரி இயக்குநர்/தாளாளர் முனைவர் ரஷீத் கஸ்ஸாலி ஆகியோர் உரையாற்றி, இன்றைய தொழில்நுட்ப உலகில் டிஜிட்டல் மாற்றத்தின் அவசியத்தையும் அதன் எதிர்காலப் பயன்பாடுகளையும் வலியுறுத்தினர்.

முக்கிய உரையை கேரளா டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். சாஜி கோபிநாத் வழங்கினார். புதுமை, செயற்கை நுண்ணறிவு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் மாணவர்களுக்கு உள்ள வாய்ப்புகளை எடுத்துரைத்து, அவர்களை ஊக்குவித்தார்.

அதனைத் தொடர்ந்து, கேரளா மேலாண்மை நிறுவனம் (IMG Kerala)-இன் அங்கீகரிக்கப்பட்ட மேலாண்மை பயிற்சியாளரான ஆஷிக் தொழில்முனைவோர் மேம்பாடு, திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் யுகத்தில் உருவாகி வரும் வேலைவாய்ப்புகள் குறித்து பயனுள்ள கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, புதுமை, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் திறன் குறித்து புதிய பார்வையைப் பெற்றனர். இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் சிறந்த அறிவுப் பகிர்வு தளமாக அமைந்தது.