தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் பிரைனியாக்ஸ் – 2026 வினாடி வினா போட்டி !
தூத்துக்குடி தூய மரியன்னை (தன்னாட்சி) கல்லூரியின் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி கணிதவியல் துறை சார்பில் ‘பிரைனியாக்ஸ்–2026’ பள்ளிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டி ஆகஸ்ட் மூன்றாம் தேதி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பல்வேறு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 22 அணிகள் (44 மாணவர்கள்) ஆர்வமுடன் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியை தூத்துக்குடி ICE King of Kings CBSE பள்ளியின் முதல்வர் ஜூலியா கிரெனாப் தொடங்கி வைத்தார்.
வினாடி-வினா போட்டியை பாளையங்கோட்டை புனித சவேரியார் (தன்னாட்சி) கல்லூரியின் கணிதவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் . டேனியல் வினாடி-வினா நடுவராக இருந்தார்.

நிறைவு விழாவிற்கு கல்லூரியின் துணை முதல்வர் அருட்சகோதரி முனைவர் எழிலரசி தலைமை வகித்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
போட்டியில் அழகர் பொதுப் பள்ளி முதல் பரிசையும், சக்தி விநாயகர் இந்து வித்யாலயா CBSE சீனியர் பள்ளி இரண்டாம் பரிசையும், புனித அந்தோணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.












