தூத்துக்குடியில் தமிழ் இலக்கியப் பேரவை நிகழ்வு நடைபெற்றது

தூத்துக்குடியில் தமிழ் இலக்கியப் பேரவை நிகழ்வு நடைபெற்றது

தூத்துக்குடியில் தமிழ் இலக்கிய பேரவை நிகழ்வு காரப்பேட்டை நாடார் தொடக்கப் பள்ளியில் ஞாயிறு மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமிழ் இலக்கியப் பேரவை தலைவர் துரை கணேசன் (இயக்கு கருவூலத்துறை பணி நிறைவு ) தலைமை தாங்கினார். தாழை மணி வரவேற்புரை ஆற்றினார்.

பழமையும் புதுமையும் என்ற தலைப்பில் எழுத்தாளர் சாந்தி பிரபு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து இலக்கியச் செம்மல் புலவர் சங்கரலிங்கம் ” ஆ முதல் ஔ ” வரை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் தொழில் அதிபர் தனபாலன் . ஷெரிப் ( ஓய்வு பெற்ற அரசு அலுவலர்) நெடுஞ்சாலை கவிஞர் செல்வராஜ் . கலையின் குரல் நிறுவனர் சக்திவேல் . வாத்தியார் குப்பம் இயக்குனர் ரஹ்மத் சாகிப், குமிழ்முனை புத்தக வாசிப்பு வண்டி நிறுவனர் சைமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். அருமை நாயகம் ( தமிழ் இலக்கிய பேரவை செயலாளர்) நன்றியுரை ஆற்றினார்.