ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது : இனி பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் தேவையில்லை., கேரள அரசு முன்மாதிரி
இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மே மாதம் முழுவதும் மாணவர்களுக்கு
கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2025-26 கல்வியாண்டில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தபின் முதல் 2 வாரங்களுக்கு மாணவர்கள் பாடப் புத்தகங்கள் தேவையில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது.
அதற்கு பதிலாக மாணவர்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வு குறித்த வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற பழமொழிக்கேற்ப நாட்டிலேயே முன்மாதிரியாக இந்த முன்னெடுப்பை கேரள அரசு கையில் எடுத்துள்ளது.












