‘நீர் எழில் பள்ளி’ திட்டம் : எழும்பூர் அரசுப் பள்ளியில் அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார் !

‘நீர் எழில் பள்ளி’ திட்டம் :
எழும்பூர் அரசுப் பள்ளியில் அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார் !

தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் தண்​ணீரை மறுசுழற்சி செய்து மீண்​டும் பயன்​படுத்​தும் வித​மாக கழி​வுநீர் மூல​மாக தோட்​டம் உரு​வாக்​கு​வது மற்​றும் நிலத்​தடி நீரை உயரச் செய்​வது உள்​ளிட்ட வழி​முறை​களு​டன் கூடிய `நீர் எழில் பள்​ளி’ எனும் திட்​டம் தனி​யார் நிதி​யுத​வி​யுடன் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இதன்​மூலம் பள்​ளி​களில் தின​மும் சுமார் 25,000 லிட்​டர் கழி​வுநீர் பாது​காப்​பாக சுத்​தி​கரிக்​கப்​பட்டு மறு​பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்​படும்.

முதல்​கட்​ட​மாக சென்னை எழும்பூர், அசோக் நகர், போரூர், அம்​பத்​தூர், வில்​லி​வாக்​கத்​தில் உள்ள 5 அரசு பெண்​கள் மேல்​நிலைப் பள்​ளி​களில் இத்​திட்​டம் அமல்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

அதன்​படி சென்னை எழும்​பூரில் உள்ள அரசு மகளிர் மேல்​நிலைப் பள்ளி வளாகத்​தில் `நீர் எழில் பள்​ளி’ திட்​டத்தை பள்​ளிக்​கல்​வித் துறை அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று ( 22 – 07 – 2026 ) தொடங்கி வைத்​தார்.

இந்​நிகழ்​வின்​ போது பள்​ளிக்​கல்​வித் துறை இயக்​குநர் ச.கண்​ணப்​பன், தொடக்​கக்​கல்​வித் துறை இயக்​குநர் பூ.ஆ.நரேஷ் உள்​ளிட்ட துறை சார்ந்த அலு​வலர்​கள் கலந்​து​கொண்​டனர்.

பங்களிப்பு: இத்திட்டம் தமிழ்நாடு பசுமைக் காலநிலை நிறுவனத்தின் (TNGCC) ஆதரவுடனும், மைக்ரோசாப்ட் (Microsoft) மற்றும் SIV இம்பேக்ட் நிதியுதவியுடனும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.