தூத்துக்குடி S.A.V. மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது

தூத்துக்குடி S.A.V. மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது

தூத்துக்குடி S.A.V.மேல்நிலைப்பள்ளியில், வியாழக்கிழமை 19.02.2026 அன்று, மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் 75 மாணவர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளிச்செயளர் அட்வகேட.சொர்ணலதா, தலைமை தாங்கினார்.

முக்கிய விருந்தினராக  தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் இணை இயக்குநர் சுவர்ணலதா
இணை இயக்குநர் கலந்து கொண்டு மிதிவண்டி வழங்கினார்.

மேலும் நிகழ்ச்சியில் 27 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா ராஜ்குமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் மாரியப்பன் மற்றும் முதுகலை ஆசிரியர் சுப்பிரமணியன் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் ஆசிரிய பெருமக்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.