தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையேயான மாவட்ட அளவிலான வினாடி வினா போட்டி :
சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம்
வ. உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழாவை முன்னிட்டு பொருளாதாரத் துறை MEANS Club சார்பில் 18.2. 2026 அன்று மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான வினாடி வினா போட்டி நடைபெற்றது.
இந்த வினாடி வினா போட்டி மாணவர்களின் அறிவுத் திறனை சோதிக்கவும், விமர்சன சிந்தனை திறனை மேம்படுத்தவும், ஆரோக்கியமான போட்டி மனப்பாங்கை வளர்க்கவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது.
மேலும், பொதுத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது பயனுள்ளதாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியில் பொருளாதாரத் துறைத் தலைவர் டாக்டர்.வள்ளியம்மாள் வரவேற்புரையாற்றினார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமை விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் முனைவர்.வீரபாகு தலைமை உரையாற்றி, வெற்றியாளர்களுக்கு வெற்றிக் கோப்பைகள், பணப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

மொத்தம் 14 பள்ளிகள் இப்போட்டியில் கலந்து கொண்டன. எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முதல் ஐந்து அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன.
டாக்டர். பக்ஷிராஜன் வினாடி வினா நடத்துநராக திறம்பட நடத்தினார். டாக்டர். நீலாதேவி நன்றியுரை வழங்கினார்.
சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசை பெற்று ₹3,000 பணப்பரிசும் கோப்பையும் பெற்றது.

காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் பரிசாக ரூ.2,000/- மற்றும் ஷீல்டும் பெற்றது.
செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் பரிசாக ரூ.1,000/- மற்றும் ஷீல்டும் பெற்றது.
அனைத்து வெற்றியாளர்களுக்கும் மற்றும் பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியை பொருளாதாரத் துறையின் அனைத்து ஆசிரியர்களும் ஏற்பாடு செய்தனர். மேலும், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள், ஆய்வாளர்கள் ஆகியோரின் முழுமையான ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி நடைபெற்றது.













