32 வது தென் மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி : தூத்துக்குடி டிலைட் பள்ளி மாணவர்கள் சாதனை

32 வது தென் மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி :
தூத்துக்குடி டிலைட் பள்ளி மாணவர்கள் சாதனை

கோஜுரியோ வேர்ல்ட் கராத்தே டூ ஷோபுகாய் இந்தியாவின் சார்பில் 32 வது தென் மாவட்ட கராத்தே சாம்பியன்ஷிப் போட்டிகள் சாயல்குடியில் நடைபெற்றது.

இதில் தென் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான வீரர்கள் பங்கேற்றனர். இதில் கோஜுரியோ வேர்ல்ட் கராத்தே டூ ஷோபுகாய் இந்தியா தலைமை பயிற்சியாளர் மற்றும் தொழில் நுட்ப இயக்குனர் டாக்டர் சுரேஷ்குமார் தலைமை நடுவராக செயல்பட்டார்.

இதில் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டானில் அமைந்துள்ள டிலைட் பள்ளி மாணவர்கள் தூத்துக்குடி மாவட்ட கராத்தே செயலாளர் சென்சாய் முத்துராஜா தலைமையில் கராத்தே போட்டியில் பங்கேற்று, இஷாரிதி தங்க பதக்கத்தையும், அஸ்வின், மரிய அனோலா வெள்ளி பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தனர் .

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் முதல்வர் சோபியா செல்வராணி, பள்ளித் தாளாளர் பிரபாகரன் ஜான், பள்ளியின் தலைவர் ஜெயசீலன், பள்ளி டிரஸ்ட் செயலாளர் மெர்லின் பிரமிளா, ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டினர்