தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் பரிசோதனை முகாம்
என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் தூத்துக்குடி பொறுப்புணர்வு திட்டத்தின் உதவியுடன் தூத்துக்குடி ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியும் அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய 8 வது இலவசகண் பரிசோதனை முகாம் பிப்ரவரி 1 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மேலாத்தூர் ஊராட்சி திருமண மண்டபம் தெற்கு ஆத்தூரில் காலை 9 மணி அளவில் என்.எல்.சி லிமிடெட் CEO அனந்தராமானுஜம் முன்னிலையில் துவங்கப்பட்டது.
ஏ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட (அணி எண்கள் 47 &57) ஒருங்கிணைப்பாளர்களான வேதியியல் துறை பேராசிரியர் முனைவர்.ஸ்டெல்லா பாக்கியம் மற்றும் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர். புஷ்பகவல்லி ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு வழிநடத்தப்பட்டது.

இந் நிகழ்ச்சி நடப்பதற்கு உறுதுணையாக ஏ.பி.சி கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் சுமார் 24 பேர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சேவை செய்தனர்.இந்த இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமில் ஏறத்தாழ 247 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கண் பரிசோதனை செய்து கொண்ட பொதுமக்கள் 37 பேர்களுக்கு மருந்துகள் மற்றும் 125 நபர்களுக்கு கண் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
14 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக அரவிந்த் மருத்துவ மனையில் வைத்து இலவசமாக சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.













