தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் TMM கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் மடிக்கணினி வழங்கும் விழா:
தூத்துக்குடி வெற்றி டிரஸ்ட் இயக்குநர் கதிரேச பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் TMM கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக முதல்வரின் உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி வெற்றி டிரஸ்ட் இயக்குநர் கதிரேச பாண்டியன், கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் கெங்குமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. கல்லூரியின் முதல்வர் அன்னலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். மேலும் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த கதிரேச பாண்டியன் மாணவர்களிடம் மடிக்கணினியின் முக்கியத்துவம் மற்றும் அதனை கொண்டு மாணவர்கள் தங்களது வாழ்வை மேம்படுத்த தகுந்த வழிகளை கூறினார்.

மேலும் தற்காலத்தில் AI பயன்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் அதனை மடிக்கணினி மூலம் கற்றுக்கொள்ளும் வழிமுறைகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இதன் பிறகு கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் கெங்குமணி சிறப்பைரை ஆற்ற, மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் 18 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இறுதியாக தேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது.












