தூத்துக்குடி வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா
தூத்துக்குடி நகர்ப்புறம் வடக்கு பத்திரகாளியம்மன் கோவில் தெரு, மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியை வார்டு கவுன்சிலர் மரிய கீதா தொடங்கி வைத்தார். மேலும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பார்வதி, ஆசிரியர் பயிற்றுநர் வனிதா , சிறப்பாசிரியர் ராஜா சண்முகம் , கணக்கர் வேல்முருகன் , கராத்தே மாஸ்டர் ஜாஃபர் ஹுசைன் மற்றும் SMC உறுப்பினர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான சிலம்பம்,பறை, ஒயிலாட்டம், கோல மிடுதல் ஆகியவற்றை நிகழ்த்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவின் சிறப்பு நிகழ்வாக சகா கலைக்குழுவினர் டாக்டர். சகா சங்கர் தலைமையில் கரகாட்டம், ஒயிலாட்டம், மாடு பிடித்தல், மூத்த கலைஞர்களின் கோலாட்டம் ஆகியவை நிகழ்ந்தது.

மாணவர்களை மகிழ்ச்சி படுத்த மிகப் பெரிய கொரில்லா பொம்மை மற்றும் மிக்கி மவுஸ் பொம்மை ஆகியவை மாணவர்களை உற்சாகப்படுத்தியது.
ஏற்பாடுகளை தலைமையாசிரியை தங்கமணி தலைமையில் ஜாய்சி, ஜெரோலின், ஹெர்மினா, அக்சிலியா, விஜயா, அமுதா, பூமா, சுதா ஆகிய ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு ஆசிரியர், பணியாளர்கள், பிற பணியாளர்கள் ஆகியோர் இணைந்து செய்திருந்தனர்.













