கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம்
கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர் சபை மற்றும் நலக்குழுவின் சார்பில் ‘வெற்றி உங்கள் கையில்’ எனும் தலைப்பிலான திறன் மேம்பாட்டு சிறப்பு கருத்தரங்கம் கல்லூரி நிர்வாகி விஜயன் ஆலோசனையின் பேரில் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக ராஜகபீர், பிரச்சார மேலாளர், P&G Gillette நிறுவனம், மதுரை
மற்றும் பவித்ரா, உதவி பிரச்சார மேலாளர், P&G Gillette நிறுவனம், திருநெல்வேலி கலந்து கொண்டு மாணவர்களுடன் நேர்காணல் முறையில் உரையாடினர்.
தமது சிறப்புரையில் ராஜகபீர், இலட்சியத்தை தெளிவுபடுத்தி அதற்கான பாதையை திட்டமிடும் திறன் மாணவர்களை வெற்றியின் உச்சிக்குக் கொண்டு செல்லும் என வலியுறுத்தினார். ஒழுக்கம், மனச் சீர்ச்சி, நேர்மையான முயற்சி, தகவல் தொடர்பு திறன் போன்ற நவீன திறன்கள் தொழில்நுட்ப உலகில் மிக அவசியம் எனவும் மாணவர்கள் அதை வாழ்வியலாக ஏற்க வேண்டும் எனவும் அறிவுரைத்தார்.

மேலும் தொழில் வாய்ப்புகள், நிறுவன எதிர்பார்ப்புகள் மற்றும் தன்னம்பிக்கை வளர்ப்பு குறித்து பயனுள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வர் முனைவர் அண்ணாமலைசாமி விருந்தினர்களை கெளரவித்து, நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காகவும் தொழில் தொடர்புகளை விரிவாக்குவதற்காகவும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் கணினி அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் சரண்யா முக்கிய பங்காற்றியதுடன், கல்லூரி பேராசிரியர்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, கேள்வி–பதில் அமர்வின் மூலம் பயனளிக்கும் வகையில் நிறைவுற்றது.












