உலக மீனவர் தினம் சிலம்பம் போட்டி :
தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் :
அமைச்சர் கீதா ஜீவன் பரிசுகளை வழங்கினார்
தூத்துக்குடி உலக மீனவர் தினத்தை முன்னிட்டு திரேஸ்புரத்தில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தூத்துக்குடி நகர் புறம் வடக்கு பத்திரகாளி அம்மன் கோயில் தெரு , மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்கள் நித்திஷ், சபரீஷ், விஷ்வா ஆகிய மூவரும் அவரவர் வயதிற்கான போட்டிகளில் முதலிடம் பெற்றனர்.

போட்டியில் வென்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வெற்றிக்கோப்பைகளை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.













