தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியில் QMAT – 25 வினாடி வினா போட்டி
தூத்துக்குடி வ. உ. சிதம்பரம் கல்லூரியின், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி கணிதத் துறை, 2001ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்காக, “QMAT” எனப்படும் வினாடி வினா போட்டியைத் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இவ்வாண்டு “QMAT–25” எனப்படும் வினாடி வினா நிகழ்ச்சி 15.10.2025 அன்று நடைபெற்றது.

நிகழ்ச்சி “QMAT–25” ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ராஜாஜி தொடக்க உரையுடன் ஆரம்பமாகி, பின்னர் வினாடி வினா போட்டி தொடங்கியது.
இந்த நிகழ்ச்சியில் டாக்டர். ஜாக்சன், டாக்டர். மரியப்பன், டாக்டர். மார்டினா ஜென்சி, டாக்டர். சிவசங்கர் ஆகிய கணிதத் துறையின் உதவிப் பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவர்கள் செல்வமீனா, கப்ரியேல், பிளெஸ்சி ராணி. மற்றும் மாலதி ஆகியோர் வினாடி வினா நடுவர் குழுவாகச் செயல்பட்டனர்.

மொத்தம் 18 பள்ளிகள் இப்போட்டியில் பங்கேற்றன.
அனைத்து பள்ளிகளும் தொடக்க சுற்றில் கலந்து கொண்டன; அதிலிருந்து 12 அணிகள் அரையிறுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் 6 பள்ளிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன.
போட்டியின் இறுதியில்,
சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப் பள்ளி மூன்றாம் இடத்தையும்,
தி விகாசா பள்ளி இரண்டாம் இடத்தையும்,
மேலும் டி.எம்.என்.எஸ். டாக்டர் சிவந்தி ஆதிதனார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல் இடத்தைப் பெற்று, கனரா வங்கி வழங்கிய சுழற்கோப்பையை (Rolling Trophy) வென்றது.

வெற்றியாளர்கள் கனரா வங்கியால் வழங்கப்பட்ட பணப்பரிசுகளையும் பெற்றனர்.
வினாடி வினா நிகழ்ச்சியின் நிறைவுவிழா பிற்பகல் நடைபெற்றது.
டாக்டர். ஜாக்சன், கணிதத் துறை உதவிப் பேராசிரியர், வரவேற்புரை வழங்கினார்.
டாக்டர். ராஜாஜி, “QMAT–25” ஒருங்கிணைப்பாளர், முழு நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்து, நிகழ்ச்சியின் சுருக்கமான அறிக்கையை வழங்கினார்.

வ. உ. சிதம்பரம் கல்லூரி முதல்வர் டாக்டர். சொ. வீரபாகு, , விழாவிற்கு தலைமை தாங்கினார்.
டாக்டர். மீனாட்சிசுந்தரம், இணைப் பேராசிரியர் மற்றும் கணிதத் துறைத் தலைவர், நிறைவுரை வழங்கினார்.
டாக்டர். நவநீதகிருஷ்ணன், (ஓய்வு) கணிதத் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர், காமராஜ் கல்லூரி, தூத்துக்குடி, விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

தூத்துக்குடி கனராவங்கி மேலாளர் – மண்டல அலுவலகப் பிரிவு ராகவேந்திரா, வெற்றி பெற்ற அணிக்கு சுழற்கோப்பையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி டாக்டர். ராஜாஜி, கணிதத் துறை உதவி பேராசிரியர் நன்றியுரை வழங்கினார்.













