தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற நிறைவுவிழா

தூத்துக்குடி ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற நிறைவுவிழா

தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் முதுநிலை மற்றும் ஆய்வுத்துறை ஆங்கிலத் துறை சார்பில் ஆங்கில இலக்கிய மன்றத்தின் நிறைவுவிழா 02.03.2026 அன்று முனைவர். வசந்தி தேவி அரங்கில் நடைபெற்றது.

தலைமை விருந்தினராக தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி, இணைப் பேராசிரியர் முனைவர்.மெர்சி லதா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியை முதுநிலை ஆங்கிலம் மாணவி செல்வி தனலட்சுமி தொகுத்து வழங்கினார். முதுநிலை ஆங்கிலம் மாணவி செல்வி மேரி ஜெஸ்லி வரவேற்புரை வழங்கினார். ஆங்கில இலக்கிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உதவி பேராசிரியர் முனைவர். அனுஷ்யா தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். ஆங்கிலத் துறைத் தலைவர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர்.மோனிகா ராம்ராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

2025–2026 ஆம் கல்வியாண்டிற்கான ஆங்கில இலக்கியச் மன்ற இதழை முனைவர். மோனிகா ராம்ராஜ் வெளியிட்டு, அதன் முதல் பிரதியை தலைமை விருந்தினர் பெற்றுக் கொண்டார். மன்றத் தலைவர் மற்றும் இளநிலை ஆங்கிலம் மாணவி செல்வி சக்தி சாரதா ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

தலைமை விருந்தினர் முனைவர். மெர்சி லதா தனது நிறைவுரையில் மாணவிகள் இலக்கிய மற்றும் கல்விசார் செயல்பாடுகளில் ஆர்வமுடன் ஈடுபட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மன்றச் செயல்பாடுகளில் சிறந்து விளங்கிய ஒன்பது மாணவிகளுக்கு சிறந்த தன்னார்வலர் விருதாக பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.