கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோர் கருத்தரங்கம்

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்முனைவோர் கருத்தரங்கம்

கோவில்பட்டி உண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “A Beginner’s Guide to Government Grants” என்ற தலைப்பில் தொழில்முனைவோர் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இக்கருத்தரங்கிற்கு கல்லூரி தாளாளர் விஜயன் தலைமையுரையாற்றினார்.

கல்லூரி முதல்வர் முனைவர் அண்ணாமலைசாமி தொழில்முனைவோர் குறித்து ஊக்கமளிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார்.


இக்கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராக முனைவர் குருகார்த்திக் பாபு கலந்துகொண்டு, புதிய தொழில்முனைவோர்க்கான அரசின் உதவிகளை நாடுவதற்கான வழிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இக்கருத்தரங்கில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை தொழில்முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர். அருண்குமார் இணைஒருங்கிணைப்பாளர் ரவினாமாரி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.