ஜே.இ.இ மெயின் 2026 பொறியியல் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த தடை – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

ஜே.இ.இ மெயின் 2026 பொறியியல் தேர்வில் கால்குலேட்டர் பயன்படுத்த தடை – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

“ஜே.இ.இ மெயின் (JEE Main 2026) தகவல் குறிப்பில் ஏற்பட்ட எழுத்துப்பிழைக்காகவும், விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காகவும் தேசியத் தேர்வு முகமை வருத்தம் தெரிவிக்கிறது” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ – NTA) அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in-ல் ஜே.இ.இ முதன்மைத் தேர்வு 2026-க்கான ஆன்லைன் பதிவுச் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. விண்ணப்பதாரர்கள் முதல் அமர்வுக்கான தங்கள் விண்ணப்பங்களை நவம்பர் 27 வரை சமர்ப்பிக்கலாம்

தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ), ஜே.இ.இ முதன்மைத் தேர்வு (JEE Main) 2026 அமர்வுகளில் மெய்நிகர் கால்குலேட்டர்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளதுடன், முன்பு வெளியிட்ட தகவலை ‘அச்சுப் பிழை’ என்று குறிப்பிட்டுள்ளது.

தேசியத் தேர்வு முகமை (என்.டி.ஏ), அக்டோபர் 31-ம் தேதி ஜே.இ.இ மெயின் 2026 தேர்வு தகவல் கையேட்டை வெளியிட்டபோது, கணினி அடிப்படையிலான தேர்வின்போது (சி.பி.டி) திரையில் ஒரு நிலையான கால்குலேட்டர் வழங்கப்படும் என்று கூறியிருந்தது. கூட்டல், கழித்தல், வகுத்தல் மற்றும் பெருக்கல் போன்ற அடிப்படை கணித செயல்பாடுகளுக்கு விண்ணப்பதாரர்கள் இந்தக் கால்குலேட்டரை ஆன்லைனில் பயன்படுத்தலாம் என்றும், இதில் வர்க்கமூலம், சதவீதம் போன்ற செயல்பாடுகளும் அடங்கும் என்றும் என்.டி.ஏ கூறியிருந்தது.

இருப்பினும், அதன் சமீபத்திய அறிவிப்பில், இந்த கால்குலேட்டர் அம்சம் ஒரு ‘பொதுவான சோதனை’ நடத்தும் தளத்தின் ஒரு பகுதியாகும் என்றும், ஜே.இ.இ முதன்மைத் தேர்வு 2026-க்கு இது பொருந்தாது என்றும் முகமை தெரிவித்துள்ளது. ஏனெனில், இந்தத் தேர்வில் எந்த வடிவத்திலும் கால்குலேட்டரைப் பயன்படுத்த அனுமதி இல்லை என்றும் அது விளக்கியுள்ளது. கணினி அடிப்படையிலான தேர்வு வடிவத்தின் போது திரையில் இருக்கும் கால்குலேட்டர், ஜே.இ.இ ஆர்வலர்களுக்குக் கிடைக்காது என்றும் அது விளக்கியுள்ளது.

“ஜே.இ.இ (JEE Main) 2026 தகவல் குறிப்பில் ஏற்பட்ட எழுத்துப்பிழைக்காகவும் (typographic error), விண்ணப்பதாரர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்காகவும் என்.டி.ஏ வருத்தம் தெரிவிக்கிறது” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது