தூத்துக்குடி கிராம சபை கூட்டம் :
புனித மரியன்னை கல்லூரி பங்கேற்பு

தூத்துக்குடி புனித மரியன்னை கல்லூரி சமுதாய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் உன்னத் பாரத் அபியான் அமைப்பின் சார்பில் சுதந்திர தினத்தன்று முள்ளக்காடு ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் உளவியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டு ஊராட்சி மக்களின் நலனுக்காக மனு வழங்கியதோடு, கல்லூரியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் மக்களின் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சி முள்ளக்காடு ஊராட்சி செயலாளர் தலையிமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் முனைவர் அருட்சகோதரி ஜெஸி, செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ், துணை முதல்வர் முனைவர் அருட்சகோதரி எழிலரசி, இயக்குநர் முனைவர் அருட்சகோதரி ஆரோக்கிய ஆல்போன்ஸ் ஜெனிசியஸ் மற்றும் உன்னத் பாரத் அபியான்(UBA) ஒருங்கிணைப்பாளர் முனைவர் புலோமின் ரெஜி ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
உளவியல் துறை தலைவர் முனைவர் ஜெய பாரதி பேராசிரியர் ஆரோக்கிய காட்சியா ஆகியோர் வழி நடத்தினர்.












