பத்திரிகை உலகின் முடி சூடா மன்னன் பா.சிவந்தி ஆதித்தனார் 91 வது பிறந்தநாள் விழா !

பத்திரிகை உலகின் முடி சூடா மன்னன் பா.சிவந்தி ஆதித்தனார் 91 வது பிறந்தநாள் விழா !

தமிழ் பத்திரிகை உலகில் சிறந்து விளங்குவது தினத்தந்தி நாளிதழ்.அதன் வெற்றிக்கு காரணமே எளிய நடையில் தமிழை எழுதி உச்சரிக்க செய்ததே காரணம் ஆகும்.

தமிழ் இருக்கும் இடமெல்லாம் தினத்தந்தி நாளிதழை வளர்த்ததின் பெருமைக்குரியவர் ஐயா.சிவந்தி ஆதித்தனார் ஆவார்.தமிழரின் பெருமை தினத்தந்தி ஆகும்.

பத்மஶ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று வீரபாண்டிய பட்டினத்தில் உள்ள ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் அமையப் பெற்றுள்ள அவரது வெண்கல திருஉருவ சிலைக்கு தினத்தந்தி அதிபர் சி.பால சுப்பிரமணிய ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் கல்வியில் சிறந்த 10 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார். பள்ளிகளுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கிய அவர் தனது கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் தினத்தந்தி அலுவலக ஊழியர்களை சந்தித்து நிறை,குறைகளை கேட்டறிந்து அவர்களை வேலைகளில் சிறந்தோங்க உற்சாகப்படுத்தினார்.

தமிழை வளர்த்த ஐயா சி.பா.ஆதித்தனார் வழிவந்த ஐயா.சிவந்திஆதித்தனார், ஐயா.சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் தொன்று தொட்டு பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி அவர்களது குடும்பத்தினர்களை வாழ வைப்பதுடன், கல்வி மற்றும் கோவில் நற்பணி ஆற்றி வருவது சிறப்புமிக்க செயலாகும்.

ஐயா வாழ்ந்த காலத்தில் நானும் பத்திரிக்கை துறையில் பணியாற்றியது மற்றும் பணியாற்றுவதில்பெருமை கொள்கிறேன்.இந்த நன்நாளில் ஐயாவை வணங்குகிறேன் 🙏

க.பொன் பலவேச ராஜ்

ஆசிரியர்

“கல்விச் செய்திகள் டாட் காம்”